தப்பாட்டம், பறை இசை-- சாதிக்கொடுமையா, கலைவடிவமா?

Image caption பறை இசை, தப்பாட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடை குறித்த சர்ச்சை

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தப்பாட்டம் என்ற இசை நிகழ்ச்சியை பொது நிகழ்வுகளில் நடத்த போலிசார் விதித்த தடை குறித்து தமிழகத்தில் சர்ச்சை எழுந்திருக்கிறது.

தப்பாட்டம் , பறை இசை என்றெல்லாம் வழங்கப்படும் இந்த இசை வடிவம் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நூற்றாண்டிலிருந்து சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது.

தலித் சமுகத்தின் ஒரு பிரிவினரால் , கோவில் விழாக்கள் மற்றும் குடும்ப மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகளின்போது , இசைக்கப்படும் இந்த இசை மற்றும் இசையுடன் கூடிய ஒருவித களியாட்ட நடனம் , அந்த சமூகத்தினரின் ஒரு பகுதியினரால், தங்களது ஒடுக்கப்பட்ட நிலையை நினைவூட்டுவதாக்க்க் கூறி,இதை தலித் மக்கள் இசைக்கக்கூடாது என்று கூறி வந்திருக்கின்றனர்.

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போலிசார் இந்த இசையை பொது நிகழ்ச்சிகளில் இசைப்பதற்கு விதித்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த இசை தொடர்பான சர்ச்சை மீண்டும் பொது தளத்துக்கு வந்திருக்கிறது

Image caption பறை இசை சாதிக்கொடுமைகளை நினைவூட்டுவதால் தடை செய்யப்படவேண்டும் -ரவிக்குமார்

ஆனால் இதன் சாதிய வரலாற்று பின் புலம் காரணமாக இதை இசைப்பதை ஒட்டுமொத்தமாகவே தடைசெய்யவேண்டும் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால் இது குறித்து மாற்றுக்கருத்தை முன்வைக்கும் மதுரை பல்கலைக்கழகத்தின் நாட்டுபுறவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஐ.முத்தையா, பறை இசை என்பதற்கு வட மாவட்டங்களில் இருந்த சாதிரீதியான எதிர்ப்பு தென் மாவட்டங்களில் அவ்வளவாக இல்லை என்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால் குடும்ப நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் இசைக்கப்பட்டு வந்த இந்த இசை, தற்போது அந்த சாதியினரைத் தாண்டி பிற சமூகத்தினராலும் இசைக்கப்படுகிறது என்கிறார் சென்னையில் புத்தர் இசைக்குழு என்ற குழுவை நடத்தி இந்த பறை இசை நிகழ்ச்சிகளை நடத்திவரும் மணிமாறன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால் இந்த இசை கர்நாடக இசை சாதிகளை கடந்து உயர்சாதியினரின் அபிமானத்தைப் பெற்றதைப் போல ஒரு உயர் அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பில்லை என்கிறார் ரவிக்குமார்

இசைக்கு மொழி , இன பேதங்களை உடைக்கும் சக்தி உண்டு என்பார்கள். ஆனால் சாதிப்பிரச்சினை வேறூன்றிய இந்தியாவில் இசை கூட ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே தொடர்கிறது.