சியாச்சனில் சிப்பாய்களுடன் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள சியாச்சன் பனி ஏரிக்கு சென்று நிலைகொண்டுள்ள இந்தியச் சிப்பாய்களை சந்தித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption மோடி வருகைக்காக ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இந்தப் பனி ஏரி இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கோருகின்ற ஒரு இடம், உலகில் மிக அதிகமான உயரத்திலுள்ள மோதல் களம் என்று இது வர்ணிக்கப்படுகிறது.

கடந்த மாதம் வெள்ளப்பெருக்கினால் கிட்டத்தட்ட முந்நூறு பேர் உயிரிழந்து பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்திருந்த ஸ்ரீநகர் பகுதிக்கு மோடி சென்றுள்ளார்.

சிப்பாய்களுடனும் காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் வியாழனன்றைய தீபாவளியைக் கொண்டாட விரும்புவதாக இந்தப் பயணத்தின் முன்னதாக மோடி கூறியிருந்தார்.