இந்திய- பாகிஸ்தான் எல்லையில் வாழ முயற்சிப்பவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் வாழ முயற்சிப்பவர்கள் - காணொளி

பாகிஸ்தான் மற்றும் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் அண்மையில் நடந்த ஷெல் தாக்குதல்களில் 20 பேர் வரை இறந்திருக்கிறார்கள்.

இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் உயிருக்குப் பயந்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருக்கும் நிலையில், இந்த வன்செயல்கள் கடந்த பத்து வருடங்களில் மிகவும் மோசமானவையாகப் பார்க்கப்படுகின்றன.

இரு நாடுகளும் இந்த வன்செயல்களை ஆரம்பித்ததாக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எப்படியிருந்தபோதிலும், இந்த வன்செயல் தாக்குதல்களுக்கு மத்தியிலும், அந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு பக்கங்களிலும் வாழும் மக்களின் வாழ்க்கை, வணிகம் ஆகியன ஏதோ ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இருந்து பிபிசி உருது சேவையின் சுமாலியா ஜஃப்ரி அனுப்பிய காணொளி.