அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

மத்தியகிழக்கின் ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்தை, கொந்தளிப்பு நிலவியதை அடுத்து , வியாழனன்று மூடியிருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதனை மீண்டும் திறந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு முன்பாக கூடுதலான பொலிஸ் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

பாலஸ்தீனர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கான தினம் என வெள்ளிக்கிழமையை அறிவித்துள்ள ஜெருசலேம் வாழ் பாலஸ்தீனர்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வலதுசாரி யூத ஆர்வலர் ஒருவர் மீது புதன்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலை அந்த பாலஸ்தீனர்தான் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஜெருசலேத்தில் அதிகமான பதற்றம் நிலவுவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கவலை வெளியிட்டுள்ளார்.