இந்திய உச்சநீதிமன்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதிய நீதிபதிகள் நியமனச் சட்டம் ஏன்?

  • 31 டிசம்பர் 2014

இந்தியாவில்உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்பின் 121ஆவது திருத்தமான இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இதன்படி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு இனி உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் மற்றும் மாறுதல்கள் ஆகியவற்றைச் செய்யும்.

தேசிய சட்ட ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தப் பரிந்துரையைச் செய்திருந்த இந்திய தேசிய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி ஏ ஆர் லட்சுமணன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியை இங்கே கேட்கலாம்.