மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் - நரேந்திர மோடி

  • 17 பிப்ரவரி 2015

இந்தியாவில் மதத் சுதந்திரத்தை பாதுகாப்பதாகவும், எந்தவொரு மதக்குழுவும் மற்றைய மதத்தின் மீது வெறுப்புணர்வை தூண்டுவதைத் தனது அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption டில்லியில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன

இந்திய தலைநகர் டில்லியில் கிறிஸ்தவர்கள் முன்னிலையில் பேசிய அவர், மதக்குழுக்கள் உணர்வுகளைத் தூண்டாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் மரியாதை காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

அண்மைக்காலமாக கிறித்தவ தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களினால், கிறித்தவ சமூகத்தினர் கோபமடைந்துள்ள சந்தர்ப்பத்திலேயே மோடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கிறித்தவ சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாதுகாக்க மோடி தவறிவிட்டார் என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே மோடியின் கருத்துக்கள் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.