காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது

  • 21 பிப்ரவரி 2015

இந்தியாவில் அதிகளவான காற்று மாசடைதல் காரணமாக நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோரின் சராசரி ஆயுட் காலம் மூன்று ஆண்டுகள் வரை குறைந்துபோவதாக புதிதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு காட்டுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நிலக்கரியை சுமந்து செல்லும் பெண்கள்

அமெரிக்க மற்றும் இந்தியப் பொருளாதார நிபுணர்களும் விஞ்ஞானிகளும் எரிசக்தித் துறை நிபுணர்களும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

தனது எரிசக்தித் தேவைக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற எரிபொருட்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பதால் நகரங்களில் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளிலும் காற்று மாசு அதிக அளவு காணப்படுவதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

அதேநேரம் இந்திய அரசு உள்நாட்டில் எடுக்கப்படும் நிலக்கரியின் அளவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக வரி விதிப்பது. காற்றில் மாசு எவ்வளவு உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற விடங்களைச் செய்வதன் மூலம் இந்த நிலமையை மாற்ற முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகராக புதுடில்லி இருக்கிறது. மேலும் பல நகரங்களில் காற்றின் அளவு மிகவும் மோசமாக இருக்கிறது.

இதனால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகம் பேருக்கு ஏற்படுகின்றன.