மோடியின் அருணாச்சலப்பிரதேச பயணத்துக்கு எதிராக சீனா புகார்

  • 22 பிப்ரவரி 2015
அருணாச்சல் பிரதேசத்திலுள்ள இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவம் படத்தின் காப்புரிமை Getty
Image caption அருணாச்சல் பிரதேசத்திலுள்ள இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசத்திற்கு சென்றதற்கான தனது எதிர்ப்பை சீனா அதிகாரப்பூர்வமான புகாராக பதிவு செய்திருக்கிறது.

அருணாச்சலப் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது.

சீனாவுக்கான இந்தியத்தூதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வருமாறு உத்தரவிடப்பட்டு, சீனாவின் கண்டனம் அவரிடம் நேரில் தெரிவிக்கப்பட்டதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடியின் அருணாச்சலப் பிரதேச வருகையானது சீனாவின் எல்லையை மதிக்காத போக்கு என்றும், பாதிக்கும் செயல் என்றும் இந்திய தூதரிடம் சீனா தெரிவித்துள்ளதாகவும் சீன ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம் தனி மாநிலமாக உருவானதன் 28 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக மோடி அருணாச்சலம் மாநிலத்துக்கு சென்றார்.

இந்திய சீன எல்லைத்தகறாறு காரணமாக இருநாடுகளுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டு குறைவான காலம் நீடித்த ஒரு போர் நடந்தது.