'தாலி' பற்றி விவாத நிகழ்ச்சி: புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பற்றிய விவாத நிகழ்ச்சி இடம்பெறுவதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி அமைப்பினர், ஒளிப்பதிவாளர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் குற்றஞ்சாட்டுகிறது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தாங்கள் ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்த "பெண்களுக்கு தாலி பெருமையைத் தருகிறதா? சிறுமையைத் தருகிறதா?" என்ற விவாத நிகழ்ச்சியை நிறுத்தத் சொல்லி இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், ஞாயிறு காலை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அருகே ஆர்ப்பாட்டம் செய்ய வந்த இந்து முன்னணியினர் ஒளிப்பதிவாளரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகம் அருகே நின்ற தன்னை பேச இடமளிக்காமல் இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்து முன்னணியினரே இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற புதிய தலைமுறையின் குற்றச்சாட்டுக்கு இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் பரமேஸ்வரன் தமிழோசையில் பதிலளித்தார்.

புனிதமான தாலியைக் கொச்சைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று அவர் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை