அவுட்லுக் சஞ்சிகை நிறுவனர் வினோத் மேத்தா காலமானார்

  • 8 மார்ச் 2015
படத்தின் காப்புரிமை Penguin
Image caption மறைந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் மேத்தா

இந்தியாவின் பிரபலமான செய்தி சஞ்சிகை ஆசிரியர்களில் ஒருவரான வினோத் மேத்தா இன்று காலமானார்.

நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு உயிரிழக்கும்போது வயது 73.

அவுட்லுக் சஞ்சிகையின் நிறுவனரான வினோத் மேத்தா, மதச்சார்பற்ற தன்மையே தனது நிலையாகப் பின்பற்றும் கோட்பாடு என்றும் அது எப்போதும் மீறப்படக் கூடாது என்றும் கூறியவர்.

தற்போது பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் பிறந்த வினோத் மேத்தா குழந்தைப் பராயத்தில் இந்தியாவில் குடியேறியவர்.

இந்திய- பாகிஸ்தான் நாடுகள் வன்முறைகளோடு பிரிவினைக்கு உள்ளான போது, அவரது குடும்பம் இந்தியாவில் குடியேறியது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளிப்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்த மேத்தா, ஏனைய சில முன்னணி ஊடகவியலாளர்களோடு முரண்பாட்டுக்கு உள்ளாக நேர்ந்தது.

முக்கிய நிறுவனங்களுக்கு தரகராக செயற்படும் ஒருவரிடமிருந்து மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் சிலர் ஆலோசனைகளைப் பெறுவதாக அந்தத் தொலைபேசி உரையாடல்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.