காணாமல்போன இந்திய மலையேற்ற வீரர் சடலமாக மீட்பு

இந்தியாவின் முன்னணி மலையேறும் வீரர்களில் ஒருவரான மல்லி மஸ்தான் பாபு தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

மலையேற்றத்தின்போது மஸ்தான் பாபு காணமல் போனதாக தெரியவந்து 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா - சிலி எல்லையில் உள்ள மலைகளில் இருந்து அவரை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி தகவல் வெளியிட்டுவந்த ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில், மலைச் சிகரங்கள் தமக்கு மிகவும் விருப்பமான குழந்தையை எடுத்துக்கொண்டு விட்டன என்று கூறி இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை குறுகிய காலப்பகுதியில் ஏறியவர் என்ற சாதனை 2006 முதல் 2008 வரை இவர் வசம் இருந்தது.

172 நாட்களில் இவர் ஏழு சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்தார்.