பாலியல் வன்புணர்வு சோதனை முறை தொடர்பில் சர்ச்சை

பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய, தடை செய்யப்பட்ட வழிமுறையை மருத்துவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் அதிகாரபூர்வ கடிதம் குறித்த தெளிவுபடுத்தலை டில்லி அரசு விடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் வன்செயல்கள் குறித்து பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
படக்குறிப்பு,

இந்தியாவில் பாலியல் வன்செயல்கள் குறித்து பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பாலியல் வன்புணர்வின் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து அறிந்துகொள்ள, மருத்துவர்கள் பிறப்புறுப்பில் இரண்டு விரல்களை நுழைத்து ஆய்வு செய்யவேண்டும் என கடந்த மே மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட சோதனையை கடந்த 2013ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் தடை செய்தது.

பெண்களின் தனிமனித சுதந்திரத்தை அது மீறுகிறது, அப்படியான ஆய்வுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறியே உச்சநீதிமன்றம் அப்படியான பரிசோதனைக்கு தடை விதித்தது.

இந்த வகையான சோதனை அப்பெண்கள் உடலுறவில் ஈடுபடுபவர்கள் என்றும், அதனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படவில்லை என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுவதற்கு வழிசெய்து வந்தது.