தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப் புறா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவின் விளிம்பில் தமிழகத்தின் மாநிலப் பறவை

  • 14 ஜூன் 2015

தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப் புறா அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.

அதன் வாழ்விடம் குறைந்து வருவது, இனப்பெருக்கத்தில் உள்ள சிக்கல்கள், சட்டவிரோதமான வகையில் வேட்டையாடப்படுதல் போன்றவை இவற்றின் எண்ணிக்கையில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

இவை தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் எதிர்கொள்கின்ற ஒரு பிரச்சினை என்றும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று இந்த ஆய்வை முன்னின்று நடத்திய காந்திகிராமம் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமசுப்பு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்