நாகா கிளர்ச்சிக் குழுவுடன் இந்திய அரசு அமைதி உடன்பாடு

  • 3 ஆகஸ்ட் 2015

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் செயல்படும் மிகப்பெரிய ஆயுதக் குழுவுடன் இந்திய அரசு அமைதி உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நாகா கிளர்ச்சியாளர்களுடன் நீண்ட காலமாக இராணுவத்தினர் மோதி வந்தனர்

நாகா தேசிய சோஷசிஸ கவுன்சில்-ஐ எம் பிரிவினருடன் இந்திய அரசு செய்துகொண்டுள்ள உடன்பாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அது அந்தப் பகுதியில் இடம்பெற்று வரும் ஆறு தசாபத கிளச்சியை முடிவுக்கு கொண்டுவரும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.

நாகாலாந்தில் பல ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக தனி நாடு கோரியும் அல்லது இந்தியாவுக்குளேயே தன்னாட்சி உரிமை கோரியும் இந்தக் குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை முன்னேற்றுவது தனது அரசின் முன்னுரிமை என இந்தியப் பிரதமர் மோடி கூறி வருகிறார்.

நாகாலாந்தில் அமைதி ஏற்படுவதற்கு அசாதாரணமான வகையில் பங்களிப்புகளைச் செய்த நாகா மக்கள் மீது தனக்கு அதிகபட்ச மரியாதையும் நன்மதிப்பும் உள்ளதாக இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அரசுடனான பேச்சுக்களில் அந்தக் கிளர்ச்சிக் குழுவின் சார்பில் அதன் தலைவர் துய்ங்கலெங் முய்வா பங்குபெற்றார்.

இந்தியாவில் நாகா இன மக்கள் பெருமபாலும் நாகாலாந்தில் வாழ்ந்தாலும், அவர்கள் மணிப்பூர், அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களிலும் பரந்துபட்ட அளவில் வாழ்கின்றனர்.