மதுவிலக்கு போராட்டங்கள்: இறந்தவர் குடும்பங்கள் சடலங்களை வாங்க மறுப்பது ஏன்?

தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மதுபானக் கடைகளை முழுமையாக மூடவேண்டுமெனக் கோரி பரவலான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தேவை என்பதை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி வந்த மதுவிலக்குப் போராளியாக அறியப்படும் சசிபெருமாள் ஜூலை 31 ஆம் தேதி தனது போராட்டத்தின் போது திடீரென உயிரிழந்த நிகழ்வு தற்போதைய தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் இந்த அளவுக்கு தீவிரமடைய காரணமாக பார்க்கப்படுகிறது.

சசிபெருமாளின் குடும்பத்தினர் ஐந்து நாட்களாக அவர் சடலத்தை வாங்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் ஒரு மதுபானக் கடை தீ வைத்து கொளுத்தப்பட்டதில் டாஸ்மாக் பணியாளரான செல்வம் புதன்கிழமை உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்தினரும் அவரது சடலத்தை வாங்க மறுத்து வருகின்றனர்.

இப்படி தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவரும் மதுவிலக்குப் போராட்டத்தில் பலியான இரண்டு பேரின் குடும்பத்தினரும் தங்கள் குடும்பத்தலைவர்களின் சடலங்களை வாங்க மறுப்பது ஏன்? இந்த போராட்டம் மற்றும் அதில் நேரும் உயிர்ப்பலிகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் என்ன கருதுகிறார்கள்? சேலத்தில் டாஸ்மாக் கடையில் அதன் பணியாளர் ஏன் இரவு தங்கினார்? அந்த கடைக்கு எப்படி தீப்பிடித்தது?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் சசி பெருமாளின் மகன் நவநீதன், சேலத்தில் இருக்கும் பத்திரிகையாளர் ஒருவர், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் துரைமுருகன் ஆகிய மூவரின் விரிவான செவ்விகளை நேயர்கள் இங்கே கேட்கலாம்.