நகராட்சிப் பொறியாளர் வீட்டில் 200 கோடி ரூபாய் பணம்

மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் வெள்ளிக்கிழமையன்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கிடைத்த பணத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய் என்று அறியப்பட்டிருக்கிறது.

Image caption நகராட்சிப் பொறியாளரான பிரணாப் அதிகாரி வீட்டில் இருந்த லஞ்சப் பணத்தை இயந்திரம் மூலம் எண்ணும் அதிகாரிகள்.

பிரணாப் அதிகாரி என்ற அந்த நகராட்சிப் பொறியாளர் கட்டட திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு, லஞ்சம் கேட்கிறார் என ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து

Image caption குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நகராட்சிப் பொறியாளர் பிரணாப் அதிகாரி.

காவல்துறையினரும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும் அவரது வீட்டைச் சோதனையிட்டனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அவரது மனைவி மறுத்துள்ளார். தனது கணவர் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

Image caption லஞ்சப் பணம் ஒரு பெட்டியில் அடுக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படுகிறது.

நகராட்சியில், கட்டடங்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பொறியாளராக பிரணாப் அதிகாரி பணியாற்றிவந்தார்.

ஹௌராவில் இருந்த அவரது இரண்டு மாடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 200 கோடி ரூபாய் பணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

Image caption பணம் வாகனத்தில் எடுத்துச்செல்லப்படுவதை அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.

2014ஆம் ஆண்டு நவம்பரில், நோய்டாவில், ஒரு பொறியாளரின் வீட்டில் இருந்து 15 மில்லியன் டாலர்கள் பணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பணியில் இருக்கும் தம்பதியின் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 4,59,770 டாலர்கள் பணமாகக் கைப்பற்றப்பட்டது. இவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Image caption இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பணம் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது, அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.

1996ல் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக் ராம் இல்லத்தில் 5,51,724 டாலர்கள் பணம், பைகளிலும் சூட்கேஸிலும் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டார்.