மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் முதல் பகுதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழகர்களுக்கு தனித்துவம் மற்றும் சிறப்புமிக்க பாரம்பரியம், பண்பாடுகள், நாகரீகங்கள், அடையாளங்களும் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஆலய வழிபாடு தொடங்கி, ஆடல் பாடல் கலைகள், ஆடை அணிகலன்கள், இலக்கணம்-இலக்கியம் என எதை எடுத்தாலும் அதில் தமிழர்களின் தனித்தன்மை தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அவ்வகையில் தமிழர்களுடைய அடிப்படை அடையாளங்களில் ஒன்று மங்கல இசை.

ஸ்ருதியும் லயமும் மிகச்சிறந்த வகையில் ஒருங்கிணைந்து சுகமான ஒரு இசையைத் தருவதில் மங்கல இசைக் கருவிகள் என்றழைக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் தவிலுக்கு தனி இடமுண்டு.

ஆலயமும் இசையும்

ஆலயங்களை ஒட்டி வளர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறையில், மங்கல இசைக்கு ஒரு முக்கிய இடம் என்றுமே இருந்துவந்துள்ளது.

அது ஆலயத் திருவிழாக்களாக இருந்தாலும் சரி இல்லத் திருவிழாக்களாக இருந்தாலும் சரி அல்லது எவ்விதமான மங்கலச் செயல்பாடுகளிலும் சரி நாகஸ்வரம் தவில் இல்லாமல் அந்த நிகழ்வு முழுமை பெறாது என்பது உண்மை.

சிறப்பான சொற்கட்டுகள், கற்பனைச் ஸ்வரங்கள், வாசிப்பதில் ஒரு தனிச் சிறப்பு, சவால்கள், ஈர்ப்பு போன்ற பல பெருமைகள் நாகஸ்வரம் தவிலுக்கு உண்டு.

Image caption மங்கல இசைக் கருவிகளைத் தயாரிக்கும் பல நிலையங்கள் நலிவடைந்த நிலையில் உள்ளன.

ஆனால் பல நூற்றாண்டு காலமாக, தமிழர் கலாச்சாரத்திலும் சமூக வாழ்விலும், பெரும்பங்கு வகித்த நாகஸ்வரம் மற்றும் தவில் இசையின் தற்போதைய நிலை என்ன? எதிர்காலம் எப்படியுள்ளது போன்றவற்றை ஆராய்கிறது பிபிசி தமிழோசை.

இத்தொடரின் முதல் பகுதியில் இந்தக் கலையின் எதிர்காலம், மற்றும் வாத்தியத் தயாரிப்பாளர்கள், இசை ஆர்வலர்கள் ஆகியோரில் சில கருத்துக்களைக் கேட்கலாம்.

மறைந்து வரும் மங்கல இசைத் தொடரை தயாரித்து வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்.