ஸ்ரீநகரின் புகழ்பெற்ற ஹஸ்ரத்பால் மசூதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஸ்ரீநகர் அஹ்மதியா மாநாட்டை இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்பது ஏன்?

இஸ்லாமின் ஒரு பிரிவாக தம்மை கூறிக்கொள்ளும் அஹ்மதியா பிரிவினர் இந்திய ஆளுகைக்குட்பட்ட கஷ்மீரில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அமைதி மாநாடு ஒன்றை நடத்த முன்னெடுப்புகளை செய்துவருகிறார்கள்.

ஆனால் அவர்கள் அந்த மாநாட்டை அங்கே நடத்தக்கூடாது என்றும் அதற்கு அரசாங்கம் தடை விதிக்கவேண்டும் என்றும் கஷ்மீரின் முக்கிய முஸ்லீம் மதத்தலைவர்களும் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த முரண்பாடும் மோதலும் ஏன் என்பது குறித்தும், அஹ்மதியா பிரிவை இஸ்லாமின் மற்ற இரண்டு பிரிவுகளான ஷியா மற்றும் சுன்னி பிரிவினர் எதிர்ப்பதும் ஏன் என்பது குறித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாதிக் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் விளக்குகிறார்.

அவரது செவ்வியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.