வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவின் முதல் ஆட்சி

  • 19 மே 2016

அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதன் மூலம், முதல் முறையாக வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை பாரதிய ஜனதா கட்சி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Dilip Sharma
Image caption அசாம் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் மகேந்திர சிங்

இன்று காலை துவங்கிய அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே பாரதிய ஜனதா கூட்டணியின் கை ஓங்கியிருந்தது.

பிற்பகல் நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கணபரிசத் கட்சி 16 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநில முதல்வர் தருண் கோகோயின் அரசு மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து பாஜகவும், பிற எதிர்கட்சிகளும் பரப்புரை மேற்கொண்டன.