ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி : "அல்லும் பகலும் உழைப்பேன்"

  • 19 மே 2016

1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியிலிருந்த கட்சியையே மீண்டும் தேர்வுசெய்திருக்கும் தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்கப் போவதாக தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், அ.தி.மு.க. 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள நிறைவேற்றப்போவதாகவும் அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக்கப்போவதாகவும் அதற்காக அல்லும் பகலும் பாடுபடப் போவதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இதுவென்றும் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய தேர்தல் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த கட்சியே தொடர்ந்து வெற்றிபெறும் பெருமையைத் தனக்குத் தந்திருப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.