பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

  • 19 மே 2016

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்கு எண்ணும் பணி முடிந்துவிட்டது. காங்கிரஸ், தி.மு.க கூட்டணி 17 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்க உள்ளது.

புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை நிலவரம்
கட்சியின் பெயர் வெற்றி முன்னிலை மொத்தம்
காங்கிரஸ் 15 0 15
அ.தி.மு.க 4 0 4
என்.ஆர்.காங்கிரஸ் 8 0 8
தி.மு.க 2 0 2
சுயேச்சை 1 0 1
மொத்தம் 30 0 30

ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், அ.தி.மு.க 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன் மாஹே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் முடிவுகள் அறிவித்துவிட்டது.

தனி பெரும்பான்மை பெற்று தி.மு.க & காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் என்.ரங்கசாமி தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலை துணை நிலை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.