"ஜனநாயகம் தோல்வியடைந்திருக்கிறது" -- தமிழக தேர்தல் முடிவு குறித்து ராமதாஸ்

  • 19 மே 2016

தமிழகத்தில் ஜனநாயகம் தோல்வியடைந்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்துகொண்டு வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி புதிய வரலாறு படைக்கப்படும் என்றும் அதுவரை பா.ம.கவின் தர்மயுத்தம் தொடருமென்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.