தமிழ்நாடு தேர்தல்: ஆரம்ப கட்ட எண்ணிக்கையில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி

  • 19 மே 2016

தமிழ்நாட்டில் நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை BBCtamil
Image caption சென்னையில் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் ஒன்றான ராணி மேரிக் கல்லூரி

இந்தியத் தேர்தல் ஆணையத் தகவல்களின் படி, இதுவரை 28 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது. திமுக கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஆனால் தனியார் தொலைக்காட்சி தகவல்கள், இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதைக் காட்டுகின்றன. மூன்றாவது அணிக்கோ அல்லது பிற கட்சிகளுக்கோ முன்னணி நிலவரத்தில் இது வரை இடம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை.