130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக முன்னிலை

  • 19 மே 2016

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நண்பகல் 12 மணி நிலவரப்படி அ.தி.மு.க. 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

படத்தின் காப்புரிமை BBCtamil
Image caption கொண்டாட்டம்

தி.மு.க. 86 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து முன்னிலயில் இருந்துவருகிறார்.

நரேந்திர மோதி வாழ்த்து

அதிமுக, 130க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னதாக முதல்வரை தொலைபேசியில் அழைத்து, தனது வாழ்த்துக்களைக் கூறியதாக ட்விட்டர் பக்கத்தில் மோதி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்