தொடங்கியது மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை

  • 19 மே 2016

மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கிய தபால் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மேற்குவங்கம், அசாம் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முதலில் வந்துள்ள தகவல்களின்படி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், இடது சாரி கூட்டணி 3 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 4 தொகுதிகளிலும், முன்னணியில் உள்ளன.

இதே போல் அசாமில் துவங்கியுள்ள வாக்கு எண்ணிகையில், முதல் சுற்று முடிவுகள் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.