நைஜீரிய மாணவர் மீது தாக்குதல்: அறிக்கை கோரும் இந்திய வெளியுறிவுத்துறை

  • 27 மே 2016

ஹைதராபாத் நகரில் நைஜீரிய மாணவர் ஒருவர் கடந்த புதன்கிழமை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கேட்டிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த அந்த மாணவருக்கு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த வாரம், டெல்லியில் காங்கோ நாட்டு மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அது, ஆப்ரிக்க நாட்டுத் தூதர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் சார்பில் கொண்டாடப்பட உள்ள ஆப்ரிக்க வாரத்தைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறிய அவர்கள், பின்னர் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டார்கள்.

காங்கோ மாணவர் தாக்கப்பட்டதன் பின்விளைவாக, காங்கோ தலைநகர் கின்ஷாஸாவில் இந்தியர்களின் கடைகள் தாக்குதலுக்கு உள்ளாயின.