ஆப்பிரிக்கர் மீது தாக்குதல்: டெல்லியில் ஐந்து பேர் கைது

  • 29 மே 2016

ஆப்பிரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இந்திய தலைநகர் டெல்லி காவல்துறை ஐந்து பேரை வியாழக்கிழமை கைது செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

ஆறு ஆப்பிரிக்க நாட்டவர் காயப்படுத்தப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மூன்று வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் காங்கோ குடியரசை சேர்ந்த ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் ஆப்பிரிக்க தூதரகங்கள் மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர சர்ச்சையைத் தூண்டியுள்ளது.

ஆப்பிரிக்க குடிமக்களை தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்க மாணவர்கள் கூட்டமைப்பு இனவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை திங்கள்கிழமை டெல்லியில் நடத்தவுள்ளது.