கொல்லப்பட்ட காங்கோ குடிமகனின் உறவினர்களுடன் இந்திய அதிகாரிகள் சந்திப்பு

  • 30 மே 2016

டில்லியில் கொல்லப்பட்ட காங்கோ நாட்டைச் சேர்ந்தவரின் உறவினர்கள் டெல்லி வந்தடைந்த இன்று (திங்கள்கிழமை) இந்திய அதிகாரிகள் அவர்களை சந்தித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் காங்கோ குடியரசை சேர்ந்த மசன்டா கெடாத ஆலிவர் மூன்று இந்தியர்களால் அடித்து கொல்லப்பட்டார்.

ஆலிவரின் இறப்பும், அதை தொடர்ந்து வந்த அடுத்தடுத்த ஆப்பிரிக்க குடிமக்கள் மீதான தாக்குதல்களும் இனவாதத்தால் தூண்டப்பட்டவை என்று கூறி ஆப்பிரிக்க மாணவர் குழுக்களும், ராஜீய அதிகாரிகளும் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை ஆப்பிரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் ஆறு பேரை வாடகை காரில் ஏற்ற மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக கூறுகின்ற அந்த வாடகைக் கார் ஓட்டுநரின் குற்றச்சாட்டையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.