மோதிக்கு எதிராக 'லைக்' போட்ட ம.பி. அதிகாரி இடமாற்றம்

  • 31 மே 2016

சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோதியை விமர்சனம் செய்ததாகக் குற்றம் சாட்டி, மத்திய பிரதேச மாநில அரசு, அதன் மூத்த அதிகாரி ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

அஜய் கங்கவார் என்ற இந்த அதிகாரி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக்கில், கங்கவார் மோதியின் கொள்கைககளை விமர்சனம் செய்யும் செய்தி ஒன்றை 'லைக்' செய்து, அரசுக்கு எதிரான நையாண்டி செய்யும் கருத்தையும் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கருத்தியல் போரோடு தொடர்புடையது என்று கங்கவார் விவரித்துள்ளார்.

(இந்தியாவில் கருத்து சுதந்திரம் பற்றிய விவாதம் நடந்துவரும் இச்சந்தர்ப்பத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது).