மதுரா வன்முறை சம்பவம்: பலி எண்ணிக்கை 29-ஆக உயர்வு

  • 5 ஜூன் 2016

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வன்முறையால் தீக்கரையான மதுரா

மதுராவில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, இந்த வன்முறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை மாலையில் ஆர்ப்பட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இது தொடர்பாக மோதல் தொடங்கியது. இதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழலில், இன்று மேலும் இருவர் மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

இதனால், மதுரா வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை 50 லட்சம் ரூபாயாக உத்தர பிரதேச மாநில அரசு அதிகரித்துள்ளது.