ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

இன்று பதவி ஏற்றுக்கொண்ட புதிய புதுவை அமைச்சரவையின் கூட்டம் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பம் ஒன்றுக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதே போல, மின்கட்டணம் தொடர்பான விவகாரத்தில், 100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 50 சதவிதம் மானியம் வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளையும் நாராயணசாமி வெளியிட்டார்.

முன்னதாக, புதுச்சேரியின் புதிய முதலமைச்சர் வி.நாராயணசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இன்று பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் முதல்முறையாக பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பதவியேற்கும் நிகழ்ச்சி, காந்தி திடல் பகுதியில் நடைபெற்றது.