தமிழக அரசின் தலைமை செயலர் மாற்றம்

  • 8 ஜூன் 2016

தமிழக தலைமைச் செயலராக இருந்த ஞான தேசிகனுக்குப் பதிலாக முதல்வரின் செயலர் பி. ராம மோகன ராவ் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Image caption தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக பி. ராம மோகன ராவ் நியமனம்

தற்போதைய தலைமைச் செயலரான கே. ஞானதேசிகன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர், நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷாந்த ஷீலா நாயர், முதல்வர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.என். வெங்கட்ராமன், முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலராகவும் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் முதன்மைச் செயலராக இருந்த ஷிவ்தாஸ் மீனா, முதல்வரின் இரண்டாவது முதன்மைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் பெரிய அளவில் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.