திரைப்படத் தணிக்கை விதிகளில் 'தாராளம்' கோருகிறார் அருண் ஜெயிட்லி

  • 10 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty
Image caption உட்தா பஞ்சாப் படத்தின் இயக்குனர் அனுரங் காஷ்யப்

திரைப்படங்களை பொதுமக்கள் பார்ப்பதற்கு சான்றிதழ் வழங்கும் விதிகளில் “ தீவிர மாற்றங்களை” அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாக, மூத்த இந்திய அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்குப் பொறுப்பாக உள்ள , நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி பேசுகையில், திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் விதிமுறைகள் மேலும் தாரளமனதுடையதாக இருக்கவேண்டும் என்றும், “தணிக்கை செய்வதைக் காட்டிலும், “சான்றிதழ்” வழங்குவதற்கே முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்றும் தான் கருதுவதாகத் தெரிவித்தார்.

“உட்தா பஞ்சாப்” என்ற க்ரைம் த்ரில்லர் வகைத் திரைப்படம் பஞ்சாப் மாநிலம் போதைப் பொருட்களின் புகலிடமாக இருப்பதாக சித்தரிக்கிறது என்பதால் அதில் அதிகமான பகுதிகளை வெட்டவேண்டும் என்று விரும்புவதாக வந்த செய்திகளை அடுத்து உருவான பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அருண் ஜெயிட்லியின் கருத்துக்கள் வருகின்றன.