இந்திய அந்நிய நேரடி முதலீடு விதிகளில் மாற்றங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில், அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிகளில் பல தீவிர மாற்றங்களைக் கொண்டு வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இந்திய அந்நிய நேரடி முதலீடு விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ள பிரதமர் மோடி

இதன் மூலம், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் , தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முழுமையாக வைத்திருக்க வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் இந்த சீர்திருத்தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றன. மேலும், இந்த சீர்திருத்தங்களால் மிகப் பெரிய ஜாம்பவான்களான ஆப்பிள் மற்றும் ஐகியா ஆகியோர் இந்தியாவில் தங்களின் அங்காடிகளை திறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியான இந்தியாவை, உலகளவில் அந்நிய முதலீடுகளை தாராளமாக அனுமதிக்கும் நாடாக மாற்றும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அதிகளவில் அந்நிய முதலீடுகள் செய்யப்படும் நாடுகளின் பட்டியலில், முதலிடத்திலிருந்த சீனாவைப் பின்னுக்கு தள்ளி விட்டு, முதலிடத்தை இந்தியா பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.