இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம்

  • 23 ஜூன் 2016

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான அனில் கும்ப்ளே, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

தரம்சாலாவில் நடந்த நிகழ்ச்சியில், அனில் கும்ப்ளேவை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ள அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது.

இது குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள டிவிட்டர் தகவலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அணில் கும்ப்ளே ஓராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வரும் ஜுலை மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள நான்கு டெஸ்ட் தொடர் அணில் கும்ப்ளேவின் முதல் பயிற்சியாளர் பணியாக அமையும்.

18 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனில் கும்ப்ளே, 619 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில், 74 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை எடுத்தது இவரது சிறந்த பந்துவீச்சாகும்.

14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கேப்டனாக அணில் கும்ப்ளே செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை AFP

அணியின் பேட்டிங், பந்துவீச்சு, மற்றும் துணை பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.