தேர்வு எழுதி 50 ஆண்டுக்குப் பிறகு 81 வயதில் கிடைத்த தங்கப் பதக்கம்

  • 23 ஜூன் 2016

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, 81 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு, ஐம்பது வருடங்களுக்கு முன் தான் எழுதிய சட்டப் படிப்புக்கான தேர்வில் முதலிடம் பிடித்ததற்கான மதிப்பு மிக்க தங்கப்பத்தம் வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Abha sharma

ஓய்வுப் பெற்ற அரசு ஊழியரான அஜித் சிங் சிங்கவி, ராஜஸ்தானில் 1969 ஆம் ஆண்டில் தான் எழுதிய சட்ட பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வில், இரண்டாம் இடம் பிடித்தார் என அறிவிக்கப்பட்டது.

தனக்கு முதலிடம் கிடைத்திருக்க வேண்டும் என அவர் இந்த பரிட்சையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

நீதிமன்றங்களில் மூலமாக நடத்திய பல நீடித்த போராட்டத்திற்கு பிறகு அவரின் மனு ஏற்கபட்டது; இன்று ஒருவழியாக அவருக்கு முதல் மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.