ராஜஸ்தானில் ஆணையும், பெண்ணையும் கட்டி வைத்து அடித்த கொடூரம்

  • 25 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Google Maps

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், திருமணமான ஒரு பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் பொதுவெளியில் அடித்து, நிர்வாணமாக்கி இரு நாட்களாக மரத்தில் கட்டி வைத்ததாக குறைந்தது 13 பேரை ராஜஸ்தான் போலிசார் கைது செய்துள்ளார்கள்.

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமவாசிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரால், இருவரும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டர்கள்.

படத்தின் காப்புரிமை PA

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் சிலர் புகைப்படங்கள் எடுக்க அது சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதன் பிறகே இந்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வர போலிசார் விசாரணையை உடனடியாக துவக்கி உள்ளனர்.

அந்த பெண் சொந்த சமூகத்தினரின் ஒப்புதலின்றி தனது கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, ஆண் நண்பருடன் வசித்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.