காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படையினர் 8 பேர் பலி

படத்தின் காப்புரிமை PS Thakur

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பம்பூரில் இன்று சனிக்கிழமை மாலை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பொறுப்பேற்றுள்ளது.

இதில், மேலும் 28 படையினர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

இது தற்கொலை குண்டு தாக்குதல் என்று மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் ஐ.ஜி நளின் பிரபாத் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த படையினரின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த

இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.