மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஈ.வி.கே.எஸ்.?

  • 25 ஜூன் 2016

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த இளங்கோவன் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் அளித்ததாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா என்ற விவரமும் ஏற்கப்பட்டிருக்கும் பட்சத்தில் புதிய தலைவர் யார் என்பது குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.