வண்ணமயமான ஏற்காடு மலர் கண்காட்சி

  • 28 ஜூன் 2016

சேலம் மாவட்டத்தின் எழில் கொஞ்சும் ஏற்காடு மலைப்பிரதேசத்தின் கோடை மலர் கண்காட்சி லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்..

Image caption கண்கொள்ளா மலர் வனம்

ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஏற்காடு மலையில் 41 வது கோடைவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

Image caption குதிரை வடிவ மலர் அலங்காரம்

லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்ட இக்கோடைவிழாவில் தோட்டக்கலைதுறையின் சார்பில் மலர் கண்காட்சியும், கால்நடை துறையின் சார்பில் நாய் கண்காட்சியும் , சுற்றுலா துறையின் சார்பில் படகு போட்டி என பலவேறு நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் மகிழ்விக்கும் விதத்திலும் நடத்தப்பட்டது.

Image caption கூடார மலர் வளர்ப்பை பார்த்து மகிழும் பார்வையாளர்கள்

இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மலர் கண்காட்சியில் விதவிதமான பழங்கள் மற்றும் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவ பொம்மைகள், காய்கறி மற்றும் பழவகைகளை செதுக்கி உருவாக்கப்பட்ட உருவ பொம்மைகள் பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

Image caption வண்டி போன்ற மலர் அலங்காரத்தை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம்

விழாவின் இறுதி நாளன்று நாய்களின் சாகஸ நிகழ்ச்சிகள், உணவு போட்டிகள் என மக்களைக் கவரும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படும்.

Image caption வண்டி மலர் அலங்காரத்திற்கு முன்னால் செல்பி எடுத்து மகிழும் பார்வையாளர்கள்

இவ்வாறான விழா தங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தாலும் , காலம் தாழ்த்தி நடத்தப்படும் இவ்விழாவினால் , சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவதாக தெரிவிக்கும் ஏற்காடு மக்கள் , இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அழகை ரசிப்பதோடு இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கையை வைக்கின்றனர்.