ஹிஸ்புல் முஜாகிதீன் குழுவின் முக்கிய தலைவன் சுட்டுக் கொலை

  • 9 ஜூலை 2016

கடந்த வெள்ளிக்கிழமையன்று தீவிரவாத குழு ஒன்றை சேர்ந்த மூத்த தளபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதால், இந்தியாவில் ஜம்மு - காஷ்மீரின் கோடை கால தலைநகரமான ஸ்ரீநகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

அந்த பிரதேசத்தில் மிகப்பெரிய தீவிரவாத குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் குழுவின் தலைவராக இருந்தவர் புர்ஹான் வானி. இருபதுகளின் துவக்கத்தில் உள்ள அவர், சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்கள் மூலம் பிரபலமான புர்ஹான் மற்ற இளைஞர்களையும் குழுவில் சேர அழைப்பு விடுத்தார்.

புர்ஹான் வானின் சொந்த ஊரான ஸ்ரீநகர் வடக்கில் உள்ள ட்ரால் நகரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவருடைய இறுதி அஞ்சலிக்காக நூற்றுக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் திரண்டனர். அங்கு கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.