மீரட்டில் வணிக வளாக இடிபாடுகளில் நான்கு பேர் மரணம்

  • 9 ஜூலை 2016

வட இந்தியாவில் ஓர் அடுக்குமாடி வணிக வளாகத்தை இடிக்கும் போது அதில் குறைந்தது நான்கு பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. அந்த வணிக வளாகத்தில் உள்ளவர்களை வெளியேற்றாமல் அதிகாரிகள் அதை இடிக்க நடவடிக்கை எடுத்ததால் இச் சம்பவம் நடந்ததகாகக் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை google

அவரச உதவிக் குழுக்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முயன்று வருகின்றனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தி பரவியதும் மீரட் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை இடிக்க சமீபத்தில் நீதிமன்றம் அனுமதியளித்தது.