'மாதொருபாகன்' நாவலை இருதரப்பு நியாயங்களோடு நீதிமன்றம் அணுகவில்லை: ராமதாஸ்

  • 11 ஜூலை 2016

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நாவல் தொடர்பான வழக்கை இருதரப்பு நியாயங்களோடு சென்னை உயர்நீதிமன்றம் அணுகவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

'மாதொருபாகன்' நாவல் சர்ச்சையை விதைத்து பரபரப்பை அறுவடை செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை

இது தொடர்பாக அவர் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில், தங்களைக் காயப்படுத்தும் ஒரு படைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் தவறு இருப்பதாகத் தெரியவில்லையென்றும், எழுத்துரிமைக்கு சிலர் தடைபோடலாமா என்ற கோணத்தில் மட்டுமே நீதிமன்றம் இதனை அணுகியுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

புதுமைப் பித்தனின் 'துன்பக்கேணி' சிறுகதையும், வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' நெடுங்கதையும் வழக்கு மற்றும் போராட்டங்களின் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்தே நீக்கப்பட்டதையும் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.