மரக்கன்று நடுவதில் உலக சாதனை படைக்க உள்ள உத்தர பிரதேச மாநிலம்

படத்தின் காப்புரிமை Getty

இருபத்தி நான்கு மணி நேரத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை ஒன்றை நடத்தி முடிக்க நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்தியா மாநிலமான உத்தர பிரதேசம்.

இதற்காக, மாநிலம் முழுக்க 50 மில்லியன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த சாதனை முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

மாலை நேரத்தில் வெளிச்சம் குறையும் போது இந்த பணி தடைப்படாமல் செயல்பட மண்ணெண்ணெய் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, பாம்புக்கடியை சமாளிக்கும் வகையில் விஷ முறிவு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கால நிலை தொடர்பான உச்சி மாநாட்டில் இந்தியா அளித்துள்ள உறுதிமொழியின் ஒரு அங்கமாக நாட்டில் உள்ள அனைத்து 29 மாநிலங்களிலும் காடுகள் நிலப்பரப்பை அதிகரிக்க இந்திய அரசாங்கம் ஊக்கமளித்து வருகிறது.