இந்திய ஜனாதிபதி மாளிகையின் அரிய காட்சிகளை ட்விட்டரில் பிரசுரித்த எழுத்தாளர்

  • 14 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை twitter amitava ghosh
Image caption ராஷ்ட்ரபதி பவனில் எழுத்தாளர் அமிதாவ் கோஷ்

இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தின் ( ராஷ்ட்ரபதி பவன்) அரிய காட்சிகளை சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு எழுத்தாளர் அமிதாவ் கோஷ் தந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

2008ல் புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவிருந்த குறும் பட்டியலில் இடம்பெற்றிருந்த 'சீ ஆஃப் பாப்பிஸ்' (Sea of Poppies )என்ற புத்தகத்தை எழுதியவரான அமிதாவ் கோஷ், குடியரசுத் தலைவர் இல்லத்தில் இருப்பிட எழுத்தாளராக இருக்கிறார்.

ராஷ்ட்ரபதி பவனில் நெல்சன் மண்டெலா உணவருந்திய மேஜை மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் தங்கிய அறைகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் ட்வீட்களை அமிதாவ் கோஷ் பதிவு செய்து வருகிறார்.

அவருடைய சமீபத்திய புத்தகம் காலநிலை மாற்றம் குறித்தானது.

படத்தின் காப்புரிமை GHOSHAMITAV
படத்தின் காப்புரிமை GHOSHAMITAV
படத்தின் காப்புரிமை GHOSHAMITAV

அமிதாவ் கோஷின் இந்த ட்விட்டர் படங்கள் வெறும் குடியரசுத்தலைவர் மாளிகையின் உட்புற தோற்றத்தை காட்டியதுடன் நின்றுவிடவில்லை.

அங்கிருந்த மிகப் பிரபலமான தோட்டங்கள் குறித்த சிறப்பு அம்சங்களையும் கோஷ் சுட்டிக்காட்டினார்.

மேலும், அங்கு வளாகத்தில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை குறித்து கூறி கவனத்தை ஈர்த்தார்.

இந்தியாவிலே மிகப்பிரபலமான மொகலாய தோட்டம் ஆண்டிற்கு ஒரு முறை பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.

படத்தின் காப்புரிமை GHOSHAMITAV
படத்தின் காப்புரிமை GHOSHAMITAV
படத்தின் காப்புரிமை GHOSHAMITAV
படத்தின் காப்புரிமை GHOSHAMITAV
படத்தின் காப்புரிமை GHOSHAMITAV

ஜனாதிபதியின் பாதுகாப்பு விவரத்தில் கவனம் செலுத்தும் உறுப்பினர்களை சந்திக்க நேரம் ஒதுக்கிய அமிதாவ் கோஷ் விக்ராந்த்தையும் நேரில் சென்று சந்தித்தார்.

ஜனாதிபதி பங்கேற்கும் அனைத்து சடங்கு அணிவகுப்பின் போதும் விக்ராந்த் குதிரையே தலைமைத்தாங்கி செல்லும்.

படத்தின் காப்புரிமை GHOSHAMITAV
படத்தின் காப்புரிமை GHOSHAMITAV

சமூக வலைத்தளத்தில் உள்ள பலரும் ராஷ்ட்ரபதி பவனில் இதுவரை யாரும் காணாத காட்சிகளை தந்ததற்காக எழுத்தாளரின் இந்த ட்விட்டர் பதிவுகள் மற்றும் புகைப்படங்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் பலரும் தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும் கூறியுள்ளனர். சிலர், ஜனாதிபதி மாளிகை குறித்த விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

''நிறைய விளக்குகளை '' அறைகளில் பயன்படுத்தலாமே என்று ஒருவரும், மற்றொருவர் தூசி நிறைந்த தரைவிரிப்புகளால் வாழ்வதற்கே மூச்சுத்திணறல் ஏற்படலாம் என்று ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார்.