தபால் துறையின் தண்ணீர் சேவை: ''கங்கை நீர் ரூ.15''

படத்தின் காப்புரிமை EPA

இந்தியாவின் தேசிய தபால் சேவையானது கங்கை நதியிலிருந்து புனித நீரை அஞ்சல் மூலம் விநியோகிக்கிறது.

கங்காஜல் என்றழைப்படும் இந்த நீர், கங்கை நதிக்கரையை ஒட்டிய இரு இடங்களில் சேகரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைத்து விற்கப்படுகிறது .

முதலில், அதன் பிறப்பிடமான கங்கோத்ரியில் இருந்தும், அடுத்து பிரபல புனித ஸ்தலமான ரிஷிகேஷில் இருந்தும் இந்த நீர் சேகரிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்கப்படும் என்று “ஸீ நியூஸ்” இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

200மி.லி., நீர் 15 ரூபாய்

பாட்டிலில் அடைக்கப்பட்ட கங்கை நீரை வீட்டிற்கே நேரடியாகப் பெறும் வசதியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும்.

இந்த கங்கை நீரை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு நடத்தும் இந்தியா போஸ்ட் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை ISTOCK
Image caption ரிஷிகேஷ்

ரிஷிகேஷிலிருந்து வரும் கங்கை நீரை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் 200மி.லி பாட்டிலுக்கு 15 ரூபாயும், கங்கோத்ரியிலிருந்து வரும் அதே அளவு பாட்டிலுக்கு 25 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மாசு அடைந்துள்ள 'கங்கை தாய்'

இந்துக்களால் புனித நதியாகக் கருதப்படும் 'கங்கை' நதியை 'கங்கை தாய்' என வழிப்படுகிறார்கள்.

ஆனால், தொழிற்சாலைக் கழிவு, சாக்கடை நீர் மற்றும் இறந்த உடல்களால் கங்கை நதி மோசமாக மாசடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty

இந்திய பிரதமர் நரேந்திர மோதி கங்கை நதியைத் தூய்மைப்படுத்த பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

ஆனால், பெரிய மாற்றம் ஏது நிகழவில்லை என்று இந்திய சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் ஜனவரியில் தெரிவித்துள்ளது.

இந்தியா போஸ்டின் பிரம்மாண்ட திட்டம்

கங்கை நதிக்கரையை ஒட்டி இயங்கும் சிறு தொழில் வியாபாரிகள், கங்கை நீரை பல ஆண்டுகளாக பாட்டிலில் அடைத்து உள்ளூரில் விற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஒப்பிட்டளவில் பார்க்கும் போது, இந்திய தபால் துறையின் திட்டம் மிகப் பிரம்மாண்ட திட்டம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

முதலில் தங்கள் நிறுவனம் கங்கை நீரை தெள்ளத் தெளிவாக மாற்ற சுத்திகரிப்பு செய்தாகவும், ஆனால் அது வியாபாரத்தை பாதித்து விற்பனையில் சரிவு கண்டதாகவும் தொழிலதிபர் சுப்ரதா கான் தெரிவித்துள்ளார்.

கங்கை நீர் சுத்தமாக இருந்தால் அது கங்கை நீர் என்று மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் ,என்று கூறிய கான்

சுத்திகரிப்பதை அவர்கள் நிறுத்தியதற்குப் பிறகு, விற்பனை அதிசயிக்கத்தக்க அளவில் அதிகரித்ததாக கூறியுள்ளார்.