தங்கச் சட்டையால் பிரபலமான நபர் கொலை

முழுக்க முழுக்க தங்கத்தால் உருவாக்கப்பட்ட சட்டையை அணிந்து பிரபலமான இந்திய நபர், கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பிறந்த நாள் விழாவுக்காக அழைக்கப்பட்ட, 48 வயதான வர்த்தகப் பிரமுகரான தத்தா புகே என்ற அந்த நபரை, சில நபர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கற்கலால் தாக்கியதாக புனேவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கான நான்கு பேரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். பணப் பிரச்சினை காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மூன்று கிராம் தங்கத்துடன் கூடிய, கால் மில்லியன் டாலர் மதிப்புள்ள சட்டையை அணிந்து வந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரபலமானார். ஏன் அப்படி வந்தீர்கள் எனக் கேட்டபோது, ''வசதி படைத்த சிலருக்கு அதிக விலையுள்ள காரை வைத்திருப்பது பிடிக்கும். அதுபோல, தங்கம் அணிவது தனது கனவு'' என்று அவர் அப்போது தெரிவித்தார்.