காஷ்மீரில் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களில் போலிஸ் சோதனை

இந்தியா நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள பல முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களின் அலுவலகங்களை போலிசார் இன்று அதிகாலை சோதனை செய்துள்ளனர்.

செய்தித்தாள் அச்சிடும் தகடுகள் மற்றும் அச்சிடப்பட்ட பிரதிகளை போலிசார் பறிமுதல் செய்ததாகவும் கிரேட்டர் காஷ்மீர், ரைசிங் காஷ்மீர் மற்றும் தி காஷ்மீர் அப்சர்வெர் ஆகிய இணையதளங்கள் போலிசார் மீது குற்றஞ்சாட்டுகின்றன.

இச்சூழலில், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு இணைய தடை ஏற்கனவே அமலில் உள்ளது.

கடந்தவாரம், இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

புர்ஹான் வானி என்ற தீவிரவாதியின் கொலையை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

படத்தின் காப்புரிமை AP

இந்த வார தொடக்கத்தில், புர்ஹான் வானி மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு அனுதாபம் தேடித் தரும் வகையில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளிப்படையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.