3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்

  • 18 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை AFP GETTY IMAGES

மூன்று ஆண்டுகளுக்குமுன், வட இந்தியாவில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர், அதே ஆண்கள் குழுவால் மீண்டும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, தாழ்ந்த சாதியை சேர்ந்த மாணவி ஆவார். மயக்கமுற்ற நிலையில் கண்டுபிடிக்ககப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார்.

தங்களுக்கு எதிராக ஏற்கெனவே நீதிமன்றத்தில் பதிந்துள்ள வழக்கை கைவிட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசத் தீர்வை ஏற்றுக் கொள்ளும்படி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு வல்லுறவில் ஈடுபட்ட ஆண்கள் அழுத்தம் கொடுத்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பெண்ணிற்கு ஏற்பட்ட முதல் தாக்குதலை தொடர்ந்து மாநிலத்தின் வேறொரு பகுதிக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மாற்றலாகி சென்றனர்.

சமீப ஆண்டுகளில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெரிதும் அறியப்பட்ட பிரச்சினையாக உள்ளது.

தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம், நாடுதழுவிய எதிர்ப்புக்கு வழிவகுத்தது.