மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக பெண்கள் மீது தாக்குதல்

இந்திய மாநிலமான மத்தியப்பிரதேசத்தில், மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பெண்கள், அங்குள்ள ரயில் நிலையமொன்றில் தாக்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இவ்விரு பெண்களும் இஸ்லாமியர்கள் என்று கூறியுள்ள போலீசார், இவர்கள் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக மாடுகளின் கண்காணிப்பாளர்கள் என்றழைக்கப்படும் சிலர் தெரிவித்ததை தொடர்ந்து, இப்பெண்கள் ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அப்பெண்கள் எடுத்துச் சென்ற இறைச்சி, எருமை இறைச்சி என்பதை சில சோதனைகள் தெரிவித்துள்ளன.

இதனால், உரிமம் எதுவுமின்றி வணிக காரணங்களுக்காக மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக குறைந்தளவு தண்டனைக்குரிய குற்றச்சாட்டையே தற்போது இப்பெண்கள் சந்திக்கவுள்ளனர்.

மேற்கூறிய பெண்கள் அடித்து உதைக்கப்பட்டும், தகாத சொற்களால் நிந்திக்கப்படுவதாகவும் வெளியான வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக பரவியுள்ளன.

பெரும்பாலான இந்திய மாநிலங்களில் , பசுக்களை இந்து சமூக மக்கள் வணங்கி வருவதால், இவற்றை கொல்வது பெரும்பாலான மாநிலங்களில் குற்றமாகக் கருதப்படுகிறது.